உல்ஹாஸ் நகரில் உள்ள விட்டல்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கான். இவரது மனைவி ஜமீலா ஒரு பார் டான்ஸர்.
ஜமீலா பாருக்கு வரும் பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருப்பதாக நினைத்து அவரது கணவர் ராஜேஷ் அவரை பல முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மேலும், தனது நண்பன் சைஃபுல்லா சேக் என்பவரை அழைத்து கொலை குறித்து தெரிவித்ததோடு, சடலத்தை மறைக்கவும் கோரியுள்ளார். ஆனால், இதுகுறித்து சைஃபுல்லா சேக் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க ராஜேஷ் போலீஸிடம் சிக்கினார்.
இது குறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்து ராஜேஷ் கொலை செய்ததாகவும், அவர் அங்கிருந்து தப்பி, தனது சொந்த ஊரான மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்திற்கு செல்லும் போது அவருடைய செல்போன் சிக்னல் மூலம் பிடிப்பட்டதாக தெரிவித்தார்.