உலகின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் ஏதோ ஒரு விவரிக்க முடியாத நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதில் ஒன்று தான் Blood Falls எனப்படும் ரத்த நீர்வீழ்ச்சி. அன்டார்டிகா கண்டத்தில் தான் இந்த ரத்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
வெள்ளை பனி கட்டிகள் மீது சிவப்பு நிற நீர், பாய்கிறது. இந்த சிவப்பு நிற நீர் எங்கிருந்து உருவாகிறது, எப்படி உருவாகிறது என்பதற்கான விடையை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை.
ஆனால் இந்த நீரில் உள்ள இரும்பு தன்மை தான் இந்த நீர்வீழ்ச்சி சிவப்பு நிறமாக காட்சி அளிக்க காரணமாக உள்ளது என கூறப்படுகிறது. மேலும் சமீபத்திய ஆராய்ச்சியில், இந்த ரத்த நீர்வீழ்ச்சி, அங்கு வாழும் நுண்ணுயிரிகளை நீரின் இரும்பு மற்றும் சல்பரால் பாதுகாக்கபடுவதாக கூறப்படுகிறது.