இரண்டு சக்கர சைக்கிள் ஓட்டிய நபருக்கு ரூ.5 கோடி அபராதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு சக்கர சைக்கிள் பந்தியத்தில் பங்கேற்று ஒருவரின் உயிரை பறித்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த 36 வயதான நபருக்கு தான் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் Gippingen என்ற நகரில் சைக்கிள் பந்தியம் நடைபெற்றுள்ளது.

இப்போட்டியில் பல மாகாணங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பந்தியம் தொடங்கிய பிறகு அனைவரும் சாலையில் வேகமாக சைக்கிளில் பறந்துள்ளனர்.

பெயர் வெளியிடப்படாத 36 வயதான நபர் இரண்டாவதாக சாலையில் சென்றுள்ளார்.

ஆனால், முதலாவதாக சென்ற நபரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என எண்ணிய அவர் முன்னால் சென்றவர் மீது வேண்டுமென்று மோதியுள்ளார்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத அவர் கீழே விழுந்ததும் பின்னால் வந்த இரண்டு வீரர்களும் கீழே விழுந்தனர்.

இந்த இருவரில் சூரிச் நகரை சேர்ந்த ஒரு வீரருக்கு பலமான காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் பலியானார்.

விபத்து ஏற்படுத்திய வீரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றம் வந்தபோது நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பின்னர், குற்றவாளிக்கு ஒரு வருடம் இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை தண்டனையும், உயிரிழந்த குடும்பத்திற்கு 4,00,000 பிராங்க்(5,88,12,742 இலங்கை ரூபாய்) அபராதமும், நீதிமன்ற செலவுகளுக்கு 75,000 பிராங்க் கட்டணமும் செலுத்த வேண்டும் எனக் கூறி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.