மூன்றாம் உலகப்போர் என்பதனை நோக்கி தற்போது உலகம் பயணித்து கொண்டிருக்கின்றது, என ஆய்வாளர்கள் கூறிய எதிர்வுகூறல்கள் பலித்து விடும் என்ற அச்சம் தற்போது மேற்குலக நாடுகள் இடையே வலம் வந்து கொண்டிருக்கின்றது.
2016 முதல் 2020 வரையான காலக்கெடு உலக அழிவுக்கு விதிக்கப்பட்டுள்ளதோடு, அது மூன்றாம் உலக யுத்தத்தின் மூலம் நடக்கும் எனவும் கூறப்படுகின்றது.
உலகின் பலம் வாய்ந்த நாடுகளான சீனா, அமெரிக்கா, ரஷ்யா போன்றன அண்டவெளி அணு ஆயுதங்களை அதிகாரபூர்வமாக பரிசோதித்து கொண்டே இருக்கின்றது. உலகில் ஆயுதமும், இராணுவமுமே அதிகரிக்கப்பட்டு கொண்டு வருகின்றது.
இவை யுத்தத்திக்கான ஆயத்தம் என மேற்குலக பத்திரிகைகள் ஆதாரம் கூறி நிறுவி வருவதோடு, அடுத்த யுத்தம் விண்வெளித் தாக்குதல்கள் மூலம் நடக்கும் எனவும் சுட்டிக்காட்டுகின்றது.
தற்போதைய உலகில் செயற்கை கோள்கள் அதிகளவாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வருகின்றது. இவற்றின் மூலமாக உலகின் பாதுகாப்பை கட்டுப்படுத்தவும், அழிக்கவும் முடியும் என்பதே உண்மை.
இதன் காரணமாகவே வல்லரசு நாடுகள் செயற்கை கோள்கள் ஏவுவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றன எனவும் கூறப்படுகின்றது.
அது மட்டுமின்றி போர் என்று வந்து விட்டால் உடனடியாக செயல்படும் விதத்திலும், தாக்குதல் நடத்தும் வகையிலுமான கட்டுப்பாட்டு செயற்கை கோள்கள் விண்ணில் சுற்றிய வண்ணம் இருக்கின்றது. அதாவது சுமார் 1200 செயற்கைகோள்கள் பூமியின் மேற்பரப்பில் சுற்றி கொண்டிருக்கின்றது.
மேலும் தற்போது வல்லரசு, மற்றும் வல்லரசு கனவு நாடுகள் விண்வெளியை ஆக்கிரமிப்பு செய்து கொள்வதில் அதி ஆர்வத்துடன் இருந்து வருகின்றது. விண்ணுக்கு செயற்கை கோள்களை ஏவுவதற்கு ஆபத்தான காரணம் உள்ளதாகவும், ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தினை அமைப்பதற்கு அதிக ஆர்வத்தினை காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் அடுத்த உலக யுத்தமானது தெற்கு சீன கடல், உக்ரைன் போன்ற இடங்களில் ‘போர் சாத்தியங்கள்’ உண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஆச்சரியம் மிக்க விடயம் என்ன வெனில் அமெரிக்கா சுமார் 500 செயற்கை கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தி வைத்துள்ளது. அதில் 100 இராணுவ நடவடிக்கைகளுக்கானதாம். அதேபோல் சீனா உளவு செய்மதிகள் உட்பட சுமார் 130 செயற்கை கோள்களை விண்ணில் பரப்பி வைத்துள்ளது. ஏனையவை பற்றி விபரங்கள் இல்லை.
முற்றிலும் அதி பயங்கரமான ஆயுதங்களை போட்டிபோட்டு உருவாக்கிக் கொண்டு இருக்கும் நாடுகள் எப்போதும் எதற்கும் தயார் நிலையில் தான் உள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களும் எச்சரிக்கைகளும் அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
இவை காரணமாக பூமி அழிவை நோக்கி நகர்ந்து வந்து விட்டது, விரைவில் அழிவை சந்திக்கக் கூடும் எனவும், செயற்கை கோள்கள் மூலமாக அது சாத்தியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவை தவிர வேறு வகையில் பூமி தொடர்பில் ஆய்வாளர்கள் 1993ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள வருடக் கணிப்புகள் இவ்வாறு உள்ளது.
2000 – சமுதாயத்தில் சமூக விரோத சக்திகளின் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மோதல்கள் அதிகரிக்கும்.
2001 – வழிபாட்டு ஸ்தலங்களில் முறைகேடுகளின் அதிகரிப்பு மற்றும் சமுதாயத்தில் சமூக விரோத சக்திகளின் அதிகரிப்பு ஏற்படும்.
2002 – கலாச்சாரங்கள் மீதான அடக்கு முறைகள், வழிபாட்டு ஸ்தலங்கள் அழிக்கப்படுதல் மற்றும் உலகில் உயிர்ப்பலிகள் அதிகரிக்கும்.
2006 – வழிபாட்டு இடங்கள் அழிவுக்கு ஆரம்ப விதைகள் உலகம் முழுதும் விதைக்கப்படும்.
2011 – தீவிரவாத அமைப்புக்கள் ஆன்மீகத்தை அழிக்கும் நோக்கில் செயற்படும்.
2014 – இயற்கை சீற்றத்தினால் பேரழிவுகள் ஆரம்பமாகும்.
2015 – வெள்ளம் மற்றும் எரிமலைகளின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
2016 – பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடும்.
2017 – மத்திய கிழக்கு நாடுகள் குண்டு வெடிப்பு காரணமாக தரை மட்டமாக்கப்படும்.
2018 – அமெரிக்கா,சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையில் யுத்தம், ஏற்பட்டு எண்ணற்ற உயிர்கள் மரணமடையும்.
2019 – அதிக அளவிலான மதத்தலைவர்கள் அரசியல்வாதிகளின் அழிவு நிகழக் கூடும்.
2020 – சுற்றுச் சூழலில் தெய்வீக உணர்வுகள் வீழ்ச்சியடையும்.
2021 – ஆன்மீகம் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் அதிகளவில் நடைபெறும்.
2022 – மகிழ்ச்சியான புதிய அனுபவங்கள் கொண்ட சூழல் குறித்த ஆர்வம் அதிகரிக்கும்.
இந்தக் கணிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று வருவதினை அவதானிக்க கூடியதாகவே உள்ளது.
மேலும் உலகம் பாரிய அழிவை சந்தித்திடும் என கூறும் ஆய்வாளர்கள், தீர்க்க தரிசிகள், விஞ்ஞானிகள் மற்றும் ஆன்மீக நூல்கள் இவை அனைத்தும் 2016 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதிகளையே எதிர்வுகூறியுள்ளது.
விண்ணில் இருந்து நெருப்பு பந்துகள் விழும், அது உலகை அழிக்கும் என தீர்க்க தரிசிகளும், ஆன்மீக வாதிகளும் கூறியுள்ளனர்.
உலகம் கடந்து வந்துள்ள பாதையும், தற்போது பயணிக்கும் பாதையையும் உற்று நோக்கும் போது உலக அழிவு ஆரம்பித்து விட்டது என மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.