தட்சனின் சாபம் காரணமாக, சந்திரன் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் நிலைக்கு ஆளானான். விமோசனம் பெற திங்களூர் திருத்தலத்திற்கு வந்து அங்குள்ள கயிலாசநாதரை வணங்கினான். இதையடுத்து சிவபெருமான் சந்திரனை, தனது சிரசில் அணிந்து விமோசனம் வழங்கினார்.
சிவபெருமானின் கருணைக்கு, திட்டையில் உள்ள மூலவருக்கு தினமும் நன்றிக்கடன் செலுத்துகிறான் சந்திரன். திட்டை வசிஷ்டேஸ்வரர் கருவறை விமானத்தின் மேலே சந்திரகாந்தக் கல்லாக சந்திரன் வீற்றிருப்பதாக ஐதீகம். அவ்வாறு இருக்கும் சந்திரன், காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, ஒரு நாழிகைக்கு (24 நிமிடம்) ஒரு முறை ஒரு சொட்டு நீரைக் கொண்டு இறைவனை அபிஷேகிக்கிறான்.