அனைத்து மாகாண தனியார் பஸ் சங்கம் போராட்டம்

தனியார் பஸ் சங்கமும் தொழிற்சங்கமும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி முதல் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏழு வீதி ஒழுங்கு குற்றங்களுக்கான அபராதத் தொகை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றமைக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் ஸ்டென்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.