இலங்கையல் நாள் ஒன்றுக்கு 800 கருக்கலைப்புச் சம்பவங்கள் பதிவாகின்றது என தென் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தென் மாகாண தொற்றா நோய்ப் பிரிவின் பொறுப்பதிகாரி நலின் விஜேசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 1100 முதல் 1200 பிறப்புக்கள் பதிவாகின்றன. அதே போன்று நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 வரையில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன.
பிறக்கும் சிசுக்களின் எண்ணிக்கைக்கு நிகரான அளவில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன. யார் என்ன சொன்னாலும் கருக்கலைப்பு என்பது ஓர் கொலையாகும். அது சட்டவிரோதமான செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.