விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்றுவரை விடை கிடைத்ததா?

இலங்கையில் உள்நாட்டு போர் பல வருடங்களாக நிகழ்ந்த நிலையில் 2000ம் ஆண்டுதமிழீழ விடுதலைப் புலிகளிளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியது.

குறித்த சமாதான சூழல் 2006ம் ஆண்டளவில் மெல்ல மெல்ல முறிவடைந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டு கார்த்திகை 27ம் நாள் மாவீரர் தின உரையில் தமிழ் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பாக சில முக்கிய கேள்விகளை கேட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான பதிலை அன்றைய இலங்கை ஜனாதிபதி கொடூர யுத்தத்தின் மூலம்அறிவித்துள்ளதாக பொதுமக்கள் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறிதம்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் அன்று கேட்ட கேள்விகளையே2009ம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்த ஏழு வருடங்கள் தாண்டிய நிலையில்தமிழ் மக்களின் முக்கிய தமிழ் அரசியற்கட்சி தலைவர்கள் கேட்கும் நிலையில்உள்ளதாக தமிழ் மக்கள சுட்டிக்காட்டியுள்ளனர்.

2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கேட்ட கேள்விகள்என்னவென்றால், 2000ம் ஆண்டு போருக்கு ஓய்வு கொடுத்து, சமாதான வழியிற் சமரசப் பேச்சுக்கள்வாயிலாக எமது மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் நேர்மையுடனும்நெஞ்சுறுதியுடனும் முயற்சித்து (2006)ஆறு ஆண்டுகள் அசைந்தோடி விட்டன.

நாம்அமைதி காத்த இந்த ஆறு ஆண்டு காலத்தில் இந்த நீண்ட கால விரிப்பில் தணியாதநெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத்தீர்வு காணப்பட்டதா?

தமிழரைச் சதா கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வரும் சிங்கள ஆட்சியாளர்களின்மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா?

தமிழரின் நீதியான நியாயமான கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்பட்டனவா?

ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனங்களால் நாள்தோறும் அவலத்திற்கும்இம்சைக்கும் ஆளாகி நிற்கும் எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா?

எம்மக்களை நாளாந்தம் அழுத்தி வரும் அன்றாட அவசியப் பிரச்சினைகள் தானும்தீர்த்து வைக்கப்பட்டனவா?

சோதனைமேல் சோதனையாக, வேதனைமேல் வேதனையாகத் தாங்க முடியாத துயரச்சுமைதமிழர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்த வேதனையால் அழுதழுது கண்ணீர் தீர்ந்து, இரத்தமே கண்ணீராக வருகின்ற சோகம்தமிழினத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

குறித்த கேள்விகள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கேட்டுள்ளார் என்பதற்குஅப்பால் ஒரு மணிதன் தமிழ் மக்களுக்காக கேட்கப்பட்ட கேள்விகளாக நாம் இவற்றைஉற்றுநோக்கி பார்த்தால் இன்றைய தமிழ்அரசியற் கட்சிகளின் தலைவர்கள்தனிமனிதர்களாக இவ்வாறான கேள்விகளை இன்றும் ஏற்றுக் கொள்வார்கள் என பொதுமக்கள்குறிப்பிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் 2006ம் ஆண்டுமாவீரர் தின உரையில் சிங்கள அரசு தமிழரை அவர்களது சொந்த மண்ணிலேயேசிறை வைத்திருக்கிறது. எமது மக்களின் சுதந்திரத்தைப் பறித்துள்ளது என்றுகுறிப்பிட்டுள்ளதன் மூலம் ஒரு நாடு ஒரே மக்கள் என்னும் சிந்தனை அவருக்குள்இருந்து வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.