மதுபானமும் உங்களுடைய பிள்ளைகளும்
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி மதுபானமும், போதைப் பொருளும் இளைஞர்களினாலும் பாவிக்கப்படுவது அனேகமாக ஒரு புதிய அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுவதற்கும், சினேகிதர்களின் பலவந்தத்துக்கும்,மூத்தோர்கள் சென்ற வழியைப் பின்பற்றுவதற்கும் தாங்கள் வயது வந்தவர்கள் என்று காண்பிப்பதற்காகவும் ஆகும். இவற்றிக்கு ஆளாகாத படி பிள்ளைகளை பாதுகாப்பது எங்களுடைய கடமை ஆகையினால் உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதற்குக் கீழ் கூறப்பட்ட அறிவுரைகள் உதவி புரியும்.
01)உங்கள் பிள்ளைகளுக்கு எதிரிலோ வாலிபருக்கு முன் மதுபானம் அருந்துவதை தவிர்க்கவும்.
02)நீங்கள் மதுபானம் அருந்துபவராயின் பிள்ளைகள், குழந்தைகளிலிருந்து விலகி அச் செயலில் ஈடுபடுங்கள்.
03)பிள்ளைகளைக் கொண்டு மதுபானம் அல்லது வேறுதேவையான பொருட்களை வாங்குவிப்பதில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்.
04)மதுபானம், போதைப் பொருள் உபயோகிப்பதினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பிள்ளைகளுக்கு எந்நேரமும் விளக்கிக் கொடுங்கள்.
05)மதுபானம் அருந்தும் நண்பர்களோடு உமது பிள்ளைகள் பழகுவதை அவதானிப்புடன் வேறுப்படுத்தவும்.
06)மது அருந்துவதினால் ஏற்படும் விளைவுகள், சட்டத்திற்குட்படுத்தல், தொழிலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை சமூகத்தில் ஒதுக்கி வைத்தல், உடல் நோய்வாய்ப்படைதல் போன்ற காரணங்களை எந்நேரமும் ஏற்றுக் கொண்ட விதத்தில் அன்பு, ஆதரவுடன் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் எடுத்துக் கூறுங்கள்.
07) உங்கள் பிள்ளைகள் வெளியில் சென்று வீட்டிற்கு வரும் போது அவர்களின் மாற்றம், மதுபான நாற்றம், இயற்கைக்கு மாறாக இருத்தல், கதைக்கமால் இருத்தல், அப்படியிருப்பின் அவர்களை சோதித்து பாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் பணம் எவ்வாறு செலவழிக்கப்படுகின்றது. அவர்களின் அறையில் மதுபான ஏதும் இருக்கின்றதா? என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் முழு அவதானத்துடன் இருக்க வேண்டும்.
08)போதை வஸ்து உபயோகிப்பதாயின் அல்லது மதுபாவனை செய்கிறார் என தெரிந்தால் அச்சந்தேகத்தை உடனும் நிவர்த்தி செய்து கொள்ளவும். எனினும் மனதை தளரவிடாமல் கோபம் கொள்ளாமல் பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் செய்ய வேண்டாம் அப்படிக் காலதாமதமான விடத்து அப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார் என உறுதி பூண்டால் போதைப் பொருள் பாவித்தல் மதுபான அருந்துவதால் தனது பிள்ளையை காப்பாற்றிக் கொள்வது கடினமான செயல் ஆகும்.
09)பிள்ளைக்கு அன்பு, கருணை, ஆதரவு அளவுக்கதிகமாகச் செலுத்தி அவரை தன்பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கு,பிள்ளை எவரை கூடுதலாக நேசிக்கின்றாரோ அவரின் மூலம் சிரமமான இப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு நாம் செயல் பட வேண்டும்.
10)இப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பின் பழக்கவழக்கத்திற்கான காரணத்தை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்து அக்காரணத்தை இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
11)இப் பழக்கத்தில் இருந்து விடுபட்டாலும் மறுபடியும் அப்பழக்கத்தில் செல்லக் கூடிய வாய்ப்பு அதிகம். அதற்கு இடம் கொடுக்காமல் பாதுகாப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கையின் மூலம் பிள்ளைக்கு உள்ள அன்பு, பாசம், கருணை, செலுத்துவதுடன் அவர்களை தனிமையில் இருக்காமல், கூடுதல் கவனம் செலுத்தி பிள்ளையை நித்தமும் செய்யும் வேலைகளுக்கு உதவி புரிவதுடன், அவர்கள் நித்திரை செய்யும் அறை கடும் சோதனைக்குட்படுத்தி அவருடன் கூடுதலான காலத்தை செலவழித்தல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உமது கவனத்தை திசைதிருப்பவும்.
12)உங்கள் பிள்ளை போதை வஸ்துக்குட்பட்டிருப்பின் அது சம்பந்தமான உமக்கு அறிவைப் பெற்றுக் கொள்ளுவதற்கு கீழ் கண்ட காரணிகள் உதவும்.
01.சமீப காலத்திலிருந்து அவரின் சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தல்.
02.அளவுக்கதிகமான கோபம், ஆக்கிரமிப்பு கொள்ளல்.
03.தனிமையாக இருப்பதற்கு எத்தனித்தல்
04.நித்தமும் பணம் கேட்டபடி இருத்தல்.
05.சாப்பாட்டில் விருப்பமின்மை.
06.பாடசாலை வேலைகளிலும் வீட்டு வேலைகளையும் தவிர்த்தல்.
06.தூக்க நிலையில் இருத்தல்.
07.கையில் இருக்கும் பணத்தை அநாவசியமாக செலவு செய்தல்.
08.வீட்டில் காசு, பொருட்களும் காணமல் போதல்.
09.நண்பர்களின் நட்பை விரும்புதல்.
உங்கள் பிள்ளை குடிப்பழக்கத்திற்கு இலக்கு ஆகினால் நீங்கள் செய்யக் கூடாதவை மற்றும் செய்ய வேண்டியவை.
01.அடித்தல், பயப்படுத்துதல்,அவருடன் கதைக்காதிருத்தல் அவமானத்துக்குட்படுத்துதல்,மிரட்டுதல் வீட்டை விட்டு துரத்துதல்.
02.அவருக்கு இலகுவில் பணம் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தல்.
03.வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்களை அவர்களிடமிருந்து பாதுகாத்தல்.
04.தேவையற்ற விதத்தில் சந்தேகப்படாமை.
05.அவருடைய போக்குவரத்துக்களை இரகசியமான முறையில் தேடிப் பார்த்தல்.