பிரபல இந்தி நடிகர் அக்ஷய்குமார் கதாநாய கனாக நடிக்கும் படம் ‘டாய்லட் ஏக் பிரேம்கதா’ (கழிப்பறை- ஒரு காதல் கதை).பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை ஆதரித்து இந்த படம் எடுக்கப்படுகிறது. கதைப்படி இந்த படத்தின் கதாநாயகன் மதுரா அருகே உள்ள நந்த காவன்கிராமத்தை சேர்ந்தவன் கதாநாயகி பர்ஸானா கிராமத்தை சேர்ந்தவள் என்று சித்தரிக் கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணரின் ஜென்ம பூமியாக கருதப்படும் புனித நகரமான மதுரா மற்றொரு நகரான பிருந்தா நகரங்களுக்கு இடையே நந்த காவன், பஷ்ஸானா கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த சில தினங்களாக இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.
கிருஷ்ணர் நந்த காவன் கிராமத்தை சேர்ந்தவர். இவருடன் லீலைகள் செய்த ராதை பர்ஸானா கிராமத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை. எனவே இந்த இரண்டு கிராமங் ளுக்கும் இடையே அந்த காலம் முதல் திருமண உறவு கிடையாது.
இந்த வழக்கத்தை முறிக்கும் வகையில் அக்ஷய்குமார் நடிக்கும் படத்தின் கதை இருக்கிறது. எனவே இந்த கதையையும், படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும். இதை மாற்றவில்லை என்றால் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கமாட்டோம். இந்த பிரிஜ் பிரதேசத்தின் பாரம்பரியத்தை எந்த ஒரு படத்திலும் தவறாக சித்தரிப்பதை இந்த பகுதி மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தலைமை சாது பூல்தோல் மகாராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மது ராவை சுற்றியுள்ள 20 கிராமங்களின் மஹா பஞ்சாயத்து சாதுக்களின் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் இந்த படம் குறித்து காரசாரமாக விவா திக்கப்பட்டது. அப்போது மஹா சாது பஞ்சாயத்தார், ‘இந்த படத்தை இயக்கும் டைரக்டர் நாராயணசிங் நாக்கை வெட்டி வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்‘ என்று அறிவித்தனர்.
மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து இந்த படத் தின் படப்பிடிப்பை வேறு இடத்தில் நடத்தி முடிக்க படக்குழுவினர் திட்டமிட் டுள்ளனர். இந்த மஹா பஞ்சாயத்தில் அந்த பகுதியில் வாழும் முஸ்லிம்களும் கலந்து கொண்டு மதுராவின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று தங்கள் ஆதரவை சாதுக்களிடம் தெரிவித்துள்ளனர்.