ஆசிரியர் ஒருவர், பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவர்களின் தலைமுடிகளை வெட்டி, அவர்களது சட்டைப்பைக்குள் திணித்தச் சம்பவமொன்று, பதுளை மகா வித்தியாலயத்தில், புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தம்மை பெரிதும் பாதித்துவிட்டதாகவும் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுககு சரியான பதிலளிக்கமுடியாது போனதாகவும் மேற்படி மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பதுளை வித்தியாலயத்தில், தரம் 9 இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே, இவ்விபரீதத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், மாகாண கல்வித் திணைக்கள அதிகாரியொருவரிடம் வினவிய போது, இச்சம்பவம் தொடர்பிலான முறைப்பாடுகள், எழுத்து மூலமாக சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியருக்கெதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.