எதிர்பாராத தருணத்தில், தமது காதலியை திருமணம் செய்வதற்கான விருப்பம் வெளியிடுவதற்கு (புரபோஷல்) பல்வேறு உபாயங்களை கையாண்டவர்கள் பற்றி அறிந்திருப்போம்.
ஆனால், நைஜீரியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் இறந்துவிட்டதைப் போல் நடித்து, காதலியை கதறியழ வைத்த பின்னர், அவரை திருமணம் செய்வதற்கான புரபோஷல் செய்துள்ளார்.
இந்த இளைஞர் வீதியோரத்தில் இறந்துகிடப்பதைப் போல் படுத்துக் கிடந்தபோது, இந்த இளைஞர் இறந்துவிட்டதாக அவரின் காதலியிடம் கூறப்பட்டது.
அதையடுத்து, அந்த யுவதி ஓடி வந்து மேற்படி இளைஞரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறியழ ஆரம்பித்தார். அக் காட்சியை சிலர் படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தின் பின்னர் அந்த இளைஞர் திடீரென எழுந்திருக்க, அவரின் காதலியும் பெரும் அதிர்ச்சியடைந்து துள்ளி எழுந்தார்.
அதன்பின் தனது காதலன் உயிருடன் இருப்பதை அறிந்து அந்த யுவதி ஆனந்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தபோது, முழந்தாளிட்டு, அவரை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் மேற்படி இளைஞர்.
இதன்போது பதிவாகிய வீடியோவை இணையத்தில் ஏராளமானோர் பார்வையிட்டுள்ளனர். இது உலகிலேயே மிக மோசமான புரபோஷல் ஒன்று என சிலர் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.