விமல் வீரவங்சவின் மனைவி, சஷி வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
போலி ஆவணங்களைக் கொண்டு கடவுச் சீட்டு தயாரித்தார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்காகவே இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விமல் வீரவங்சவின் மனைவி குற்றத்தை ஒப்புக் கொள்ளாமை காரணமாக,இந்த வழக்கு இன்றைய தினம் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.