கற்றாழை ஜூஸ் தினமும் குடித்தால் 7 அற்புதம் நடக்கும்!

சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் நிரம்பப் பெற்ற அற்புத ஆயுர்வேத மூலிகை. தற்போது மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிலும், அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களிலும் முன்னுரிமை இதற்குதான்.

அழகிற்கும் சரி , ஆரோக்கியத்திற்கும் சரி பல அருமையன பலனைக் கொண்டது கற்றாழை. இதனை சாறாக்கி குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என சமீபமாக நடந்தேறிய ஆய்வுகள் கூறுகின்றன.

அவ்வாறு தினமும் கோற்றுக் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு நாளுக்கு தேவையான விட்டமின் மற்றும் மினரல் :

உங்கள் உடல் போஷாக்கு பெற தினமும் விட்டமின் மற்றும் மினரல் சத்து அவசியம். விட்டமின் டி தவிர்த்து மற்றவை முழுவதும் கற்றாழை ஜூஸில் அடங்கியுள்ளது.

மஞ்சள் காமாலையை தடுக்கும் :

வயது ஏற ஏற ஜீரண மண்டலத்தில் பிரச்சனைகள் உண்டாவது நமக்கு புலப்படுகிறது. ஆனால் நீங்கள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்துக் கொண்டு வந்தால் ஜீரண மண்டலத்தில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி ஜீரண உறுப்புகள் இளமையாகவே இருக்கும்.

ரத்த சோகை :

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்தி பாருங்கள். ஆச்சரியப்படும்படி மாற்றம் உண்டாகும். அதுமட்டுமல்லாது கல்லீரல் நோய்கள், என பல நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.

ஹார்மோன் ஒழுங்குபடுத்தும் :

ஹார்மோன் சம நிலையில்லாமல் இருந்தால் மொத்த உடல் இயக்கத்திலும் பாதிப்பு உண்டாகும். இதற்கு இந்த ஜூஸ் நல்ல மருந்து. ஹார்மோன் சுரப்பை சீர்படுத்துகிறது.

சருமத்திற்கு ஏற்றது :

கற்றாழை ஜூஸ் குடித்தால் உங்கள் வெளிப்புற அழகிற்கு போடுவதை விட இரு மடங்கு அழகை தரும். உள்ளிருந்து ஊட்டம் அளித்து உங்களை இளமையாக்கும்.

நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் :

அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருக்காது. அவர்கள் இந்த ஜூஸை குடித்தால் பலனை கண்கூட பார்க்கலாம். உயர் ரத்த அழுத்தம் குறையும், சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்கும்.

எப்படி குடிப்பது ? 20 மி.லி. கற்றாழை ஜெல்லை எடுத்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.