பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கருப்பு மற்றும் வெள்ளை முடியுடன் சேர்ந்து பிறக்கும் வினோத விடயம் 200 வருடங்களுக்கு மேலாக ஒரு குடும்பத்தின் பரம்பரையில் அரங்கேறி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள வில்லிம்ங்டன் நகரை சேர்ந்தவர் Ronda King McCullough (49) இவர் பரம்பரையில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் ஒரு வினோத விடயத்துடன் பிறக்கிறார்கள்.

அதை பற்றி அவரே கூறுகிறார், எனக்கு இப்போது பேத்தி பிறந்திருக்கிறாள், அவள் தலை முடியில் கருப்பு நிறத்துடன் சேர்ந்து வெள்ளை நிறமும் உள்ளது.

இதை கேட்க உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது எங்கள் குடும்பத்துக்கு இல்லை.

ஏனென்றால் எங்கள் குடும்பத்தில் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பிறந்த எல்லாருக்குமே தலை முடியின் நிறம் கருப்பும் வெள்ளையுமாக தான் உள்ளது.

எங்கள் பரம்பரையில் இப்படி இருப்பவர்களின் புகைப்படங்களை நாங்கள் ஞாபகார்த்தமாக சேர்த்து வைத்துள்ளோம் மற்றும் ஏன் இப்படி என் பரம்பரைக்கு இப்படி ஆகிறது என ஆராய்ச்சியில் எல்லாம் நான் இறங்கியதில்லை என கூறுகிறார்.

மேலும், முக்கால்வாசி நபர்கள் இப்படி பட்ட முடி நிறத்துடன் தான் எங்கள் பரம்பரையில் பிறக்கிறார்கள். ஆனால் சிலர் மட்டும் இதில் விதிவிலக்கு.

அதாவது, என் உடன் பிறந்த சகோதரிகளுக்கு இந்த வெள்ளை நிற முடி பிரச்சனை இல்லை. அவர்கள் முடியின் நிறம் ஒரே நிறத்தில் சீராக உள்ளது என McCullough கூறியுள்ளார்.

முதலில் இது எங்களுக்கு தர்மசங்கடமாக இருந்தாலும், போக போக பழகி விட்டது என்கின்றனர் McCullough குடும்பத்தினர்.white-hair