சேற்றுப் புண் வந்தால் இதை செய்து பாருங்கள்! சூப்பரான டிப்ஸ்!

சேற்றுப் புண் என்பதை நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும். சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும் (cure Muddy ulcer) மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும்.

மேலும் விவசாயிகள் வயல்வெளியில் வேலைகளில் ஈடுபடுவோருக்கும் சேற்றுப்புண் வரும். சேற்றுப் புண் septic ஆகிவிட்டால் வலி அதிகரிக்கும்.

இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம்.

மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும்.

இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும்.அரைக்கப்பட்ட மருதாணி இலை அல்லது தேனுடன் குழைக்கப்பட்ட மஞ்சள் தூள் போன்ற இயற்கை வைத்தியங்கள் மூலம் இது குணப்படுத்தப்படலாம்.

புண்ணில் ஈரத்தன்மை அண்டாமல் பார்த்துக்கொள்வதாலும் இதை குணப்படுத்தலாம். முழுமையாக குணமாக அதிகபட்சமாக ஒரு வாரம் வரை ஆகலாம்.

சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது.அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம்.

இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.

காலணி அணியும் போது கால்களுக்கடையில் மருந்துகளை பவுடராக போடுவதன் மூலமும் நோய் தொற்றுவதை குறைக்கலாம்.மூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.

இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரமின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.