அண்மையில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இவர் விஜய் ரசிகர் என்பதால் விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் இந்த படத்தை பாராட்டியும் அஜித் ரசிகர்கள் கேலி செய்தும் வந்தனர்.
ஆனால் நேற்று ஜி.வி-யை அஜித் ரசிகர்கள் அளவுக்கு மீறி ஓட்டிவிட்டார்கள் போல. அதனால் கடுப்பான ஜி.வி, ரசிகர்களின் கேலிக்கு பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். ஆனால் இதில் அஜித் போன்ற உச்ச நடிகர்களை தான் கேலி செய்கிறோம் என்பதை கூட அவர் மறைந்துவிட்டார் போல. பின்னர் அஜித்தை தான் தாக்கி பேசிய ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க வந்த புதிதில் அவர் திறமையை மட்டுமே நம்பி அவருக்கு கிரீடம் படத்தில் வாய்ப்பு கொடுத்தவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.