ஸ்ரீலங்கா இரானுவத்தின் அறிவிப்பையும் மீறி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பங்கேற்புடன் எழுச்சியுடன் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கிற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள், அதில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியை சுற்றி மரக்கன்றுகள் நாட்டினார்கள்.
அதன் பின்னர் கைலாசபதி கலையரங்கில் ஒன்று திரண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்கள் என பல்கலைக்கழக் சமூகத்தினர் அனைவரும், முன்னதாக ஐந்து நிமிட மௌன அஞ்சலி செய்தனர்.