பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்து வரும் ‘ஓ நமோ வெங்கடேசாயா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக்க்கில் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் 44 கிலோ எடையுடன் கூடிய உடையை அணிந்து நடனமாடும் ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதுகுறித்து நாகார்ஜூனா தனது டுவிட்டரில் ‘ பிரக்யா ஜெய்ஸ்வால் அணிந்து ஆடும் உடை சுத்த தங்கமாக இல்லாவிடினும், அவரது ஆட்டத்தின் திறமை உண்மையிலேயே சுத்தமானது’ என்று தெரிவித்துள்ளார்.