ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள நர்வால் என்ற பகுதி ஆப்பிள் உள்ளிட்ட பழவகைகள் மற்றும் கேரட் போன்ற காய்கறிகளுக்கான மொத்த விற்பனை சந்தைக்கு பிரசித்தி பெற்ற இடமாகும்.
இந்த இடத்தில் பல குடிசைப்பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு குடிசைப்பகுதியில் உள்ள ஒருவீட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென எரிந்த தீப்பிழம்புகள் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கும் பரவியதில் 80-க்கும் அதிகமான குடிசைகள் எரிந்து, சாம்பலாகின.
தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் நிலையில் இந்த கோரவிபத்தில் சிக்கிய மூன்றுபேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.