சுவிட்ஸ்ர்லாந்தின் பல மாநிலங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று மாலை ஆரம்பமாகியுள்ளன.
அந்தவகையில், சூரிச் மாநிலத்தில் உள்ள சிவன் ஆலயம் மற்றும் லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம் ஆகியவற்றில் தற்போது இறை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நினைவு நாள் இறை வழிபாட்டில் உயிர் நீத்தவர்களை நினைத்து புலம்பெயர் தமிழ் உறவுகள் இறைவழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம் பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.