19 வருடம் உடன் வாழ்ந்து வந்த மனைவி பெண் அல்ல ஆண் என தெரிந்து அதிர்ச்சியான கணவன்!

பெல்ஜியத்தை சேர்ந்தவர் ஜேன் என்பவர். இவரது மனைவி மோனிகா இந்தோனேசியாவை சேர்ந்தவர். கடந்த 1993-ம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆனது. பெல்ஜியத்தில் குடியேற சட்டங்கள் மிக கடுமையானது.

அந்த கடினமான சட்டங்களை எல்லாம் எதிர்கொண்டு தனது ஆசை மனைவி மோனிகாவை பெல்ஜியம் அழைத்து வந்தார் ஜேன். ஆனால், 19 வருடங்கள் கழித்து தனது வாழ்வில் இப்படி ஒரு அதிர்ச்சி ஏற்படும் என ஜேன் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்…

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

பல தடைகளை தாண்டி தான் திருமணம் செய்து வந்து 19 வருடங்கள் குடித்தனம் நடத்திய மனைவி ஒரு பெண் அல்ல, ஆண் என தெரிந்து அதிர்ச்சி ஆகியுள்ளார் ஜேன்.

ஜேன் புலம்பல்!

ஜேன் புலம்பல்!

மோனிகாவை பெண் என எண்ணி திருமணம் செய்து வந்த ஜேன், அவர் என்னை ஏமாற்றிவிட்டார், அவரை பெல்ஜியம் அழைத்து வர நான் மிகவும் சிரமப்பட்டேன்.

பெல்ஜியம் நீதிமன்றம் அவ்வளவு எளிதாக யாருக்கும் அனுமதி அளிக்காது. கோர்ட் நிராகரிக்க முயன்ற போதிலும் நான் போராடி அனுமதி பெற்றேன். ஆனால், மோனிகா தன்னை ஏமாற்றிவிட்டார்.

64 வயது!

64 வயது!

ஜேனுக்கு வயது 64, மோனிகாவிற்கு வயது 48. இருவரும் முன்னரே குழந்தை வேண்டாம் என தீர்மானம் செய்ததால் தான் இந்த பிரச்சனை முன்பே தெரியாமல் போய்விட்டது. ஜேன் முந்தைய திருமணத்தில் இரு குழந்தைகள் பெற்றவர்.

ஏமாற்றினார்!

ஏமாற்றினார்!

நாப்கின் வைத்து ஒவ்வொரு முறையும் தன்னை முட்டாள் ஆக்கியுள்ளார் மோனிகா. அவர் பல உண்மைகளை தன்னிடம் இருந்து மறைத்துள்ளார் என் வருந்துகிறார் ஜேன்.

செக்ஸ்!

செக்ஸ்!

செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது கூட, நான் இந்த மாற்றத்தை உணர்ந்தது இல்லை. மோனிகா ஜேனின் குழந்தைகளுக்கு ஒரு அக்கா போன்ற தோற்றத்தில்தான் இருப்பார்.

ஜேனின் குழந்தைகளே பல சமயங்களில் ஒருவிதமான மாற்றங்களை மோனிகாவிடம் உணர்ந்ததாக கூறியுள்ளனர்.

பாலியல் மாற்று சிகிச்சை

பாலியல் மாற்று சிகிச்சை

அங்கும், இங்கும் புரளிகள் பரவுவதை கண்டும் காணாமல் இருந்த ஜேனுக்கு இது பெரிய அதிர்ச்சி தான். மோனிகா பாலியல் மாற்று சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண். தனது கடந்த காலம் பற்றி கூற விருப்பமில்லை என்பதால் இதுபற்றி கூறவில்லை என்கிறார் மோனிகா.