இலங்கை மீது ஒபாமாவின் அரசாங்கத்தினால் சுமத்தப்பட்டிருந்த போர்க்குற்றச்சாட்டு தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என அனைவரும் அவதானம் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் தலைக்கீழாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றார் என சந்தேகம் எழுந்துள்ளதாக போர்க்குற்றம் தொடர்பில் செயற்படுகின்ற ஐக்கிய நாடுகளின் முன்னாள் தூதுவர் ஸ்டீவன் ரூப் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில் ட்ரம்ப்பின் நோக்கம் அதற்கு மாறுப்பட்ட வகையில் காணப்படுவதாக ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா கொண்டிருந்த நிலைப்பாடிற்கு மாற்று நிலைப்பாடொன்றை ட்ரம்ப் மேற்கொள்வார் என தகவல் வெளியாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.