இதை மட்டும் பாலோ பண்ணுங்க! நீங்களும் அம்பானி ஆகலாம்

’பணம்’ இன்றி இவ்வுலகில் ஒரு அணுவும் அசையாது.. அப்படி பட்ட பணத்தை பலர் சம்பாதித்தாலும் அதை சேமிக்கவோ, பராமரிக்கவோ முடியாமல் திணறுவார்கள்.

மகிழ்ச்சியாகவும் வாழ அதே நேரத்தில், பண விடயத்தில் சரியாகவும் இருப்பது எப்படி?

பட்ஜெட்

பட்ஜெட் போட்டு வாழ்க்கையை மேற்கொள்வது , பணத்தை எந்தெந்த விடயத்துக்கு செலவு செய்வது, எப்படி செலவு செய்வது போன்ற விடயங்களுக்கு உதவும். மேலும் பட்ஜெட் மூலம் பண சேமிப்பின் மகிமையை உணர முடியும்.

தேவை இல்லாததை வாங்க வேண்டாம்

அவங்க கிட்ட இது இருக்கு அதனால நாம அந்த பொருளை வாங்கணும் போன்ற எண்ணமே வேண்டாம். நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்கினாலே மகிழ்ச்சி அதிகரிக்கும், வீண் செலவுகள் குறையும்.

பொருட்கள் வாங்க பட்டியல்

கடைக்கோ அல்லது அங்காடிக்கோ பொருட்கள் வாங்க ஷாப்பிங் போகிறவர்கள் பலர் பட்டியல் போடாமல் செல்லும் போது அதிகமான செலவுகள் நேரக்கூடும். எனவே எப்போதும் ஷாப்பிங் செல்லும் போது ஒட்டுமொத்தமாக என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்றும் முன்கூடியே பட்டியல் போட்டு செல்வது நல்லது.

டிஸ்கவுண்ட் கூப்பன்கள்

இப்போதெல்லாம் எந்த பொருட்கள் வாங்கினாலும் டிஸ்கவுண்ட் கூப்பன்கள், வவுச்சர்கள் தருவது பல இடங்களில் வாடிக்கை உள்ளது. எனவே ஸ்மார்டாக டிஸ்கவுண்ட் கூப்பன்கள் மற்றும் வவுச்சர்களை மறக்காமல் கேட்டு வாங்கினால் நம் செலவுகளை குறைக்கும்.

விலை ஒப்பீடு

எந்தவொரு பொருட்களை வாங்கும் போதும் அதை முன்பு வாங்கியவர்களிடமோ அல்லது இணையம் மூலமோ ஒப்பீடு செய்து கொள்வது நல்ல பயனளிக்கும்.

பழக்க வழக்கங்கள்

புகை பிடித்தல், மது, பாக்கு போடுவது போன்ற தேவையில்லாத தீய பழக்கத்தை குறைத்து கொண்டாலே பணம் அதிக சேமிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.

பங்குச் சந்தை

நீண்ட நாட்கள் முதலீடு செய்து லாபம் பெறக் கூடிய பங்குகளில் முதலீடு செய்ய தயங்க கூடாது, ஏனெனில் அது நல்ல பயனை தரும் என்பதை மறவாதீர்கள்.

மோசடி

பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என அனைவருக்கும் தெரியும். தவறான நிதி நிறுவனத்திடமோ, தவறான வங்கிகளிடமோ அல்லது சீட்டுகள் மூலமோ நம் பணத்தை இழக்கவே கூடாது.

தேவையில்லாத செலவை குறைத்தல்

பலர் விதவிதமான பொருட்களை விட்டில் வாங்கி வைத்து கொள்வார்கள். ஆனால் எதை உபயோகப்படுத்தவே மாட்டார்கள், அது வெறும் காட்சி பொருளாகவே வீட்டில் இருக்கும். இப்படி நாம் உபயோகபடுத்தாத பொருட்களை வாங்குவதை நிறுத்துனால் நிறைய பணம் மிச்சமாகும்.