இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40% வீதமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு செயற்றிட்டத்தின் ஆய்விலே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனால் வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அமைப்பின் பணிப்பாளரும் மருத்துவருமான சிசிர லியனகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.