கருப்பு வேனில் மாணவன் கடத்தல்!

கண்டியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் கல்லூரி ஒன்றில் உள்ள மாணவர் ஒருவர் நேற்று சில மணித்தியாலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் இந்த வருடம் க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி நேர வகுப்பிற்கு செல்லும் வழியிலேயே இனந்தெரியாத குழுவினர் கருப்பு வேனில் வருகைத் தந்து குறித்த மாணவனை கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

காதல் விவகாரம் காரணமாகவே குறித்த மாணவன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார் என கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.