தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் புலனாய்வாளர்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கின் நுழைவாயில் சிவப்பு, மஞ்சள் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு, தலைவர் பிரபாகரனின் படம் வைக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் கேக்கில் மேதகு பிரபாகரன் என எழுதப்பட்டு 62 ஆவது மெழுகு திரி கொழுத்தப்பட்டுள்ளது.