ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்

எதிர்வரும் 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இரண்டு தலைவர்களிடம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கடந்த 22ம் திகதி விரிவாக கலந்துரையாடிய பின்னர், அமைச்சரவையில் மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

இந்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இணக்கமாக செயற்படாதது நல்லாட்சி தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக அமைந்துள்ளதாக இரண்டு தலைவர்களும் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக தீர்மானிப்பதை வரவு செலவுத் திட்டம் முடியும் வரை ஒத்திவைக்க இரு தலைவர்களும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.