கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா! மெய்மறந்த பார்வையாளர்கள்…

அமெரிக்காவில் சிறந்த குடிமகனுக்கான விருது வழங்கும் விழா நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

இதுவே அமெரிக்கவின் தற்போதைய ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமாவின் கடைசி விழா என கூறப்படுகிறது.

இதில் கலந்து கொண்ட பராக் ஒபாமா சிறந்த குடிமகன்களுக்கான விருதினை வழங்கி வந்தார்.

அப்போது விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமுமான எலன் டி ஜெனிரெஸ் பற்றி குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதில் எலன் பிறப்பால் பெண் என்றும் ஓரின சேர்க்கை சமூகமான எல்ஜிபிடியை(LGBT) சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டது.

மேலும் இன்று அமெரிக்காவில் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு அரசின் ஆதரவு இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன் அப்படி ஒரு நிலை இல்லை.

அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்காக உரிமை குரல் கொடுத்தவர் எலன். இந்த விருதுக்கு எலன் பொருத்தமானவர். அவர் அமெரிக்காவை மானுட தளத்தில் முன்நகர்த்த பாடுபட்டார் என கூறியுள்ளார்.

அப்போது இதைக் கேட்ட எலன் கண்கலங்கத் தொடங்கியுள்ளார்.

இதை அருகில் இருந்து கண்ட ஒபாமா அவரை தன்னுடைய உடன் பிறந்த சகோதரன் போல் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறியுள்ளார்.

இதை அங்கு கூடியிருந்த அனைவரும் மெய்மறந்து இரசித்துள்ளனர்.

எலனுக்கு தற்போது 58 வயதாகிறது. இவர் தன்னுடைய 38 வயதில் தன் பால் விருப்பத்தை அறிவித்தார். அதன் பின் அவர் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டார்.

பல சோதனைகளையும் மேற்கொண்டார். அன்றைய காலக் கட்டத்தில் அவருக்கு பெரிதும் ஆதரவாக இருந்தவர் அவருடைய தாயார் மட்டுமே.

மேலும் அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதப்படும் எல்ஜிபிடியினருக்கு அதிக உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கியவர்.

ஓரினச்சேர்க்கையாளர்களின் பெருமை பேரணி நடைபெறும் போது வெள்ளை மாளிகையிலும் அதை விழாவாக கொண்டாடியவர்,

அதுமட்டுமில்லாமல் ஒரினச்சேர்க்கையாளர்கள் ஹார்வி மில்க் மற்றும் பில்லி ஜீன் கிங் ஆகியோருக்கு ஜனாதிபதி விருது அறிவித்தவரும் அவரே.

இப்படி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த ஒபாமா தற்போது ஜனாதிபதியாக கடைசியாக கலந்து கொண்ட விழாவிலும் ஓரினச்சேர்க்கை சமூகத்தை சேர்ந்த எலன்க்கு விருது வழங்கியதை அந்த சமூகம் என்றும் நினைவில் வைத்திருக்கும் என கூறப்படுகிறது.obama-end1