எதற்கும் அடிமையாகாமல் வாழப் பழகிக் கொள்ளுங்கள் – புறக்கோட்டையில் ஜனாதிபதி

தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி மற்றும் பௌதீக வளங்களின் அபிவிருத்திகளுக்குஅடிமையாகாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நவீன உலகத்தில் சமூக சூழ்நிலை பல்வேறு மாற்றங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இதனை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

முக்கிய நகரங்களில் நல்லவை போன்றே தீயவைகளும் மலிந்து காணப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.