முழுமையான கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் தொடர்பான கோப் குழுவின் முழுமையான அறிக்கை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 13 பாகங்களைக் கொண்ட கோப் அறிக்கை சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதில் திறைசேரி முறி விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள்,தற்போதைய ஆளுநர்கள், மத்தியவங்கி அதிகாரிகள், கணக்காய்வாளர் நாயகம் அடங்கலான பலரது சாட்சியங்கள் மற்றும் திறைசேரி முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான ஆவணங்கள் எழுத்து மூலமான ஆவணங்கள்,பிரதமர் நியமித்த காமினி பிடிபன குழுவின் அறிக்கை உட்பட 2 ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்களை கொண்டதாக இந்த அறிக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோப் அறிக்கை கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை கடந்த வருடம் மே 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த 13 பாகங்களிலும் கணக்காய்வாளரின் அறிக்கை மத்திய வங்கி திறைசேரி முறி தொடர்பான முழுமையான அறிக்கை இது வரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது குறித்து ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த அறிக்கையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிந்தார்