செவ்வாய் தோஷம் நீங்கப் பல பரிகாரங்கள் உண்டு.
செவ்வாய்க்கிழமையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவரவர்கள் சக்திக்கேற்ப, துவரை தானம் செய்ய வேண்டும். துவரையை ஒரு சிவப்புத் துணியில் முடிந்து, வெற்றிலை பாக்கு, மஞ்சள், பூ, பழம், தேங்காய், வெல்லம் இவற்றை ஒரு தட்டில் வைத்து துர்க்கா பூஜை செய்து ஏழ்மையான நிலையில் உள்ள ஒருவருக்கு தானமாகக் கொடுப்பது நல்லது. துவரை தானம் செய்யும் போது உங்கள் சக்திக்கேற்ப காணிக்கையும் அதில் வைத்து, உணவு உண்ண செய்து அனுப்ப வேண்டும்.
வாழைப்பூத் தானம் :
ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்
செவ்வாய் தோஷ நிவர்த்திகள் :
உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும். இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து தானம் கொடுக்க வேண்டும்.