உலக அழிவு எந்த நொடியும் நிச்சயம்! காத்திருக்கும் சர்வதேசம் – நம்பமுடியாத ஆதாரம் இதோ..!!

சர்வதேசம் உலக அழிவுக்கு தயார் ஆகி வருகின்றது என்பது நம்ப முடியாத ஒன்று என்றாலும் நம்பியாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுத்தும் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

நாம் நாளைய தினத்திற்காக எதனை சேர்த்து வைத்திருக்கின்றோம்? ஆனால் சர்வதேச நாடுகள் ஒரு புது உலகத்திற்காகவே ஆயத்தமாகி வருகின்றது என்ற அதிர்ச்சி தகவல்கள் தற்போது வெளிவருகின்றது.

உலக விதை பெட்டகம் ஒன்று மறைமுகமாக உருவாக்கப்பட்டு வருகின்றது, உலகின் மூலை முடுக்கு அனைத்திலும் உள்ள தானிய விதைகள் அனைத்தும் ஒரு இடத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றது.worldend1

தானிய வகைகளோடு மரங்கள், தாவரங்கள் உற்பட அனைத்தும் எதிர்காலத்திற்காக அதி உயர் பாதுகாப்புடன் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றது.

ஆர்க்டிக் பெருங்கடலில் நோர்வேசிய தீவுக்கூட்டம் உள்ளது அதில் உள்ள சுவல்பார்டு எனும் தீவிலேயே இந்த இரகசிய இடம் உள்ளது.

உலக விதை பெட்டகம் என இந்த இடம் வெளிப்படையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அழிவின் பின்னர் மீண்டும் உலகை புதுப்பிப்பதற்கான இடமே இது எனவும் கூறப்படுகின்றது.worl-map1

இந்த இடத்தில் சுமார் 860,000 பயிர்களின் விதைகள் சேமிக்கப்பட்டுள்ளது, காலநிலையினால் எந்த வித தாக்கத்திற்கும் இந்த இடம் பாதிப்படையாது.

அத்தோடு வெளியில் ஏற்படும் எந்த விதமான தாக்குதலும் பாதிக்காது, முக்கியமாக வாசலை தவிர மற்றைய பகுதி பனிக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது.

அதிர்வு ஏற்படின் சட்டென்று பனியினால் மூடிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சேமிக்கப்படும் பயிர்கள் பல நூறு வருடங்களின் பின்னர் மீண்டும் பயன்படுத்தக் கூடியது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

எதற்காக இப்படி ஓர் இடம்? விஞ்ஞானிகளின் கூற்றுப்படி உலக அழிவு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்கின்றார்கள் அப்படியாயின் இவ்வாறானதொரு இரகசிய இடம் எதற்காக?world-e1

மேலும் இப்போது உள்ள அறிவியலின் படி ஒவ்வொறு நாடும் இவ்வாறானதொரு இடத்தினை ஒரு வருட காலப்பகுதிக்குள் உருவாக்கி விட முடியும் என்பதே உண்மை. ஆனால் ஏன் எங்கோ ஒரு மூலையில் இப்படியான தொரு இடத்தினை அமைக்க வேண்டும்?

ஆய்வாளர்களின் கூற்றுபடி சர்வதேசம் உலக முடிவு எந்தநொடியும் ஏற்படலாம் என காத்திருக்கின்றது என்றும், அப்படி அனர்த்தம் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் மீண்டும் உலகம் தானாக அல்லது யார் மூலமாக ஆக சரி புதுப்பிக்கப்பட வேண்டும்.

இதேவேளை உலக அழிவின் பின்னர் எதிர் காலத்தின் தேவைக்காக, யாருக்காவது உதவ வேண்டும் என்பதற்காக இப்படி உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறினாலும், உலக யுத்தத்தின் பின்னர் மீண்டும் உலகை புதுப்பிக்க செய்யும் செயலே இது எனவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

எப்படியாயினும் உலக அழிவு எந்நொடியும் ஏற்படும் சாத்தியக் கூறு உள்ளது, சர்வதேசம் இதனை உலக மக்களுக்கு தெரிவிக்க மறுத்தாலும் உண்மைகள் எப்படியும் வெளிவந்தே தீரும்.

காத்திருங்கள் ஒவ்வொறு நொடியும் நிச்சயம் இல்லை, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நாம் எப்போது வேண்டுமானாலும் அழிந்து போகலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவை மறைக்கப்படுவதற்கான காரணம் உலக மக்கள் பயந்து தமது கொள்கைகளில் இருந்து விடுபட்டு விடுவார்கள் என சர்வதேசம் பயந்த காரணத்திற்காகவே எனக் கூறப்படுவதிலும் உண்மைகள் உண்டு.