உலகில் இப்படியும் ஒரு கொடூரமான தாயார் இருக்கிறாரா?

சுவிட்சர்லாந்து நாட்டில் காதலனுடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல தடையாக இருந்த கருவை வயிற்றிலேயே கொடூரமாக கொலை செய்த தாயாருக்கு நீதிமன்றம் கடும் தண்டனை விதித்துள்ளது.

சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Yverdon-les-Bains நகரில் 36 வயதான பெண் ஒருவர் தனது காதலனுடன் வசித்து வருகிறார்.

இருவருக்கும் 3 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், கடந்தாண்டு இருவரும் ஈகுவேடார் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விமான டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அதே நேரம் தாயார் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.

சுற்றுலா செல்ல வேண்டிய நேரத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என எண்ணிய தாயார் கருவை கலைக்க தீர்மானித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக, அளவுக்கு அதிகமாக மது அருந்தியும் சிகரெட்டுகளை பிடித்தும் வந்துள்ளார். ஆனால், வயிற்றில் உள்ள கரு கலையவில்லை.

வேறு வழியில்லாத காரணத்தினால் கர்ப்பமான தனது வயிற்றை பலம் கொண்டு கைகளால் தாக்கியுள்ளார். ஆனால், இந்த முறையும் கரு கலையவில்லை.

இறுதியில், கருவை கலைக்க ஒரே வழி தான் உள்ளது என தீர்மானித்த அப்பெண், வேண்டுமென்று தனது வயிற்றை மேஜையின் கூர்மையான முனை மீது பலமாக பலமுறை மோதியுள்ளார்.

இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது.

பின்னர், 3 வயது மகனை அழைத்துக்கொண்டு காதலனுடன் திட்டமிட்டவாறு ஈகுவேடார் நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு சுவிஸ் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

ஆனால், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தாயார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, வயிற்றில் இருந்த கருவை திட்டமிட்டு கலைத்த குற்றத்திற்காக தாயாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 200 பிராங்க் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.