பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வேந்தர்மூவிஸ் மதன் கடந்த 21 ஆம் திகதி திருப்பூரில் அவரது தோழியான வர்ஷா என்பவரின் வீட்டில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மதன் வழக்கில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
மதன் கைது செய்வதற்கு துருப்பு சீட்டாக இருந்த சென்னையை சேர்ந்த கீதாஞ்சலி என்ற பெண் குறித்த முழு விவரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதாவது, மதன் தலைமறைவாக இருந்தபோது, கீதாஞ்சலி இலங்கை சென்றுள்ளார்.
அங்கிருந்து சிம் கார்டு ஒன்றையும் வாங்கி வந்து மதனுடன் வாட்ஸ் அப்பில் பேசியுள்ளார்.
தகவல்களை ஆராய்ந்த போது சிம் கார்டு இலங்கை முகவரியையும், செல்போன் சிக்னல் சென்னையையும் காட்டியது.
தொடர்ந்து கீதாஞ்சலியை கண்காணித்து மதனை கைது செய்தோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் மதனிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவரின் சில பதில்கள் முக்கிய திருப்பமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.