வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தற்காலிகமாக காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை இரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள காணிகளை வரி முறையின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தற்காலிகமாக வழங்குவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, சந்தித்த அமைச்சர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு எதிராக மக்களை தூண்டி விடும் நடவடிக்கையில் கடந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என அமைச்சர்கள், பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆட்சியின் போது நாட்டின் காணிகள் வெளிநாட்டவர்களுக்கு முழுமையாக விற்பனை செய்யும் வகையிலேயே வழங்கப்பட்டது.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக 99 வருடங்களுக்கு அல்லது அதற்கு குறைவான வருட காலங்களுக்கே காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாத்திரம் அல்ல திருகோணமலை, கண்டி, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட காணிகளை, சீன, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.