சமீபத்தில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தின் பாடலான ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடலை ரசித்து கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலை பாடிய வைக்கோம் விஜயலெட்சுமி கேரளாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோஷை திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் 2017ஆம் ஆண்டு மார்ச் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வையற்றவராகிய வைக்கோம் விஜயலெட்சுமி கேரளாவில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே வைக்கோம் விஜயலெட்சுமி தமிழ், மலையாள மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். மிகவும் கடினமான காயத்திரி வீணை இசைப்பதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கதுல்.