யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் கால வரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா இதனை தெரிவித்தார்.
ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்னால் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.