தந்தையின்றி தாய் வளர்ப்பில் முன்னேறி ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்!

தாய் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பார்கள். மந்திரங்கள் தவறாகி போனாலும், கோயில் ஒருபோதும் தவறாகி போவதில்லை. தந்தை இல்லாமல் வளர்வதை விட, தாய் இல்லாமல் வளர்வது தான் கடினம். தந்தையிடம் இருந்து அறிவை பெறலாம். ஆனால், அன்பு, பாசம், உறவுகள், அறிவு, சமூகத்தோடு ஒத்து பழகுதல் என உலகில் வாழ அனைத்தும் கற்பிக்கும் உறவு அம்மா மட்டும் தான். அப்படி, தந்தையின்றி தாய் வளர்ப்பில் முன்னேறி ஜொலித்த 5 பாலிவுட் நட்சத்திரங்கள் பற்றி இங்கு காணலாம்…

ஷாருக்கான்!

கிங் கான் என புகழப்படும் ஷாருக்கின் இளம் பருவம் சற்றே கடுமையானது தான். இவரை வளர்த்தது இவரது தாய் பாத்திமா கான் தான். ஷாருக் 15 வயதிலேயே தனது தந்தையை இழந்தவர். பாத்திமா தான் குழந்தைகளை வளர்த்தார். ஷாருக்கானின் தாயும் நீண்ட நாள் உடல்நல குறைபாட்டால் 1990-ல் மரணமடைந்தார். தான் வாழ்க்கையில் சாதித்த அனைத்திற்கும் காரணம் தனது தாய் என ஷாருக் எப்போதும் கூறுவார்.

கரிஷ்மா – கரீனா கபூர்!

பாலிவுட்டின் அழகு நடிகைகளில் கரிஷ்மா – கரீனாவிற்கும் பெரிய இடம் இருக்கிறது. இவரது தாய் பபிதா தான் இவர்களை வளர்த்தார். பபிதாவும் புகழ்பெற்ற நடிகை தான. ஆனால், இவருக்கும் இவரது கணவர் ரன்திர் கபூருக்கும் இடையேயான திருமண உறவு ஆரம்பக் கட்டத்திலேயே கசப்பான நிலையை எட்ட இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு இரு மகள்களையும் பபிதா தான் வளர்த்தார்.

ஷாஹித் கபூர்!

ஷாஹித்-ன் பெற்றோர் அவருக்கு மூன்று வயது இருக்கும் போதே பிரிந்துவிட்டனர். பிறகு ஷாஹித்-ன் தாய் இரண்டு முறை விவாகரத்து செய்த போதிலும், ஷாஹித் கபூர்-ன் கடினமான காலங்களில் அவரை மீண்டும் ஒளிர வைத்தது இவர் தான்.

கொங்கனா சென்!

கொங்கனா சென், அபர்ணா சென்னின் மகள் ஆவார். இவர் அபர்ணா சென்னின் இரண்டாவது கணவருக்கு பிறந்தவர். துறை ரீதியாக பல சர்வதேச, தேசிய விருதுகள் வென்ற அபர்ணா சென்னின் இல்வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. இவர் மூன்று முறை திருமணம் செய்தவர் ஆவார். இல்துணை சரியாக அமையாத காரணத்தால், தனது மகள் கொங்கனா சென்னை தானே வளர்த்தார் அபர்ணா சென்.

பார்ஹான் அக்தர்!

பன்முக திறமை கொண்ட பார்ஹான் அக்தர் ஒரு சிறந்த நடிகர். தந்தையை விவாகரத்து செய்த பிறகு தனது தாய் தன்னை கஷ்டப்பட்டு வளர்த்தார் என்றும், தந்தை இல்லை என்ற உணர்வே இல்லாதபடி பார்த்துக் கொண்டார் என்றும் பார்ஹான் அக்தர் ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார்.