சிவன் போன்ற யோகி தான் என்னை ஆப்கான் போரில் காப்பாற்றினார் – பிரிட்டிஷ் அதிகாரி தகவல்!

இந்தியாவில் ஒவ்வொரு கோவிலுக்கு பின்னாலும் பல கதைகள் உலாவி கொண்டிருக்கும். சிலவன வார்த்தைகளாக மட்டும், சிலவன வரலாற்று ஆவணங்களுடனும் நம்மை சுற்றிக் கொண்டிருக்கும். அந்த வகையில் பைஜ்நாத் மகாதேவ் கோவில் பற்றி கூறப்படும் கதைகளுள் ஒன்று தான் இந்த பிரிட்டிஷ் அதிகாரி கதை.

சற்றே வினோதமான, மர்மமான கதையாக இது திகழ்கிறது. அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே இயங்கிக் கொண்டிருந்த இந்தியாவின் காலம். மனிதத்தன்மை அற்று, அழிக்கும் போக்கில் பிரிட்டிஷ் இந்தியாவை ஆண்டுக் கொண்டிருந்த நாட்கள் அவை.

மத்தியப்பிரதேசத்தின் அகர் மால்வா எனும் இடத்தில் பிரிட்டிஷ் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லெப்டினன் கேணல் மார்ட்டின்.

இவர், இவரது மனைவி மற்றும் ஆப்கான் போர் முடித்து வந்து இவர் கூறிய சம்பவமும் தான் அந்த வினோதமான கதை.

லெப்டினன் கேணல் மார்ட்டின் பல போர்களுக்கும், சண்டைகளுக்கும் சென்று வந்தவர். எந்த போருக்கு சென்றாலும். அங்கிருந்து தனது மனைவிக்கு கடிதங்கள் அனுப்பவதை வழக்கமாக வைத்திருந்தார் லெப்டினன் கேணல் மார்ட்டின். ஆனால், இந்த கடித போக்குவரத்து லெப்டினன் கேணல் மார்ட்டின் ஆப்கான் போருக்கு சென்ற போது தடைப்பட்டுப் போனது.

லெப்டினன் கேணல் மார்ட்டினிடம் இருந்து நீண்ட காலம் கடிதம் வராமல் போகவே, லெப்டினன் கேணல் மார்ட்டினின் மனைவி மிகவும் பதட்டம் அடைந்தார். அவரது மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியது. தன் கணவன் நன்றாக உள்ளாரா என்பதை காட்டிலும், உயிருடன் தான் இருக்கிறாரா என்ற அச்சம் அவருக்குள் உண்டாக ஆரம்பித்தது.

லெப்டினன் கேணல் மார்ட்டினின் மனைவி வசித்து வந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்த இந்தியர் ஒருவர், இவரது மன அழுத்தம் பார்த்து உதவ வந்தார். அவர் சிவனை வணங்குங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என கூறி, பைஜ்நாத் மகாதேவ் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

அந்த கோவிலில் இருந்த குருக்கள், அச்சம் விலக ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை 11 நாட்கள் சொல்லும்படி கூறி அனுப்பியுள்ளார். 11வது நாள் மாலை லேடி மார்டின் மந்திரங்களை கூறி முடிக்கும் போது லெப்டினன் கேணல் மார்ட்டினிடம் இருந்து டெலிகிராம் மூலம் செய்து பெற்றதாக கூறப்படுகிறது.

நான் எப்போதும் உனக்கு போர் காலத்திலும் செய்திகளை அனுப்பி கொண்டுதான் இருந்தேன். ஆனால், எதிரிகள் எங்களை எல்லா புறமும் சுற்றி வளைத்துவிட்டனர். மரணத்தை தவிர வேறு வழி இல்லை என்று தான் இருந்தோம். நீண்ட சடாமுடியில் திடீரென யோகி ஒருவர் தோன்றினார்.

அவரது கையில் மூன்றி கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதம் இருந்தது. அவர் பார்க்க மிகவும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருந்தார். அவர் ஆயுதம் ஏந்தி நிற்கும் தோரணை மிகவும் வியக்கம் படி இருந்தது, என தான் அனுப்பிய செய்தியில் லெப்டினன் கேணல் மார்ட்டின் குறிப்பிட்டிருந்தார்.

இவரை கண்ட பிறகு எதிரிகள் திரும்பி ஓடிவிட்டனர். எங்கள் நிலை தோல்வியில் இருந்து வெற்றியாக மாறியது. அந்த யோகி உடையாக சிங்கத்தின் தோலை அணிந்திருந்தார் என மேலும் தகவல்கள் கூறியிருந்தார் லெப்டினன் கேணல் மார்ட்டின்.

போர் களத்தில் இருந்து ஊர் திரும்பிய பிறகு லெப்டினன் கேணல் மார்ட்டின் மற்றும் லேடி மார்டின் இருவரும் தம்பதியாக பைஜ்நாத் மகாதேவ் கோவிலுக்கு சென்று சிவனை வழிப்பட்டனர் என்றும். அங்கு சிவன் உருவ சிலையை கண்ட லெப்டினன் கேணல் மார்ட்டின் அந்த யோகியின் தோற்றம் இந்த கடவுளை போலவே இருந்தது என கூறினார் என்ற தகவல்களும் கூறப்படுகிறது.