கரகாட்டக்காரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதற்கு அந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆன அழகு தேவதை கனகாவும் ஒரு காரணம். புகழ்பெற்ற கதாநாயகி தேவிகாவின் அன்புமகள்..!
கரகாட்டக்காரன் வெற்றிக்கு பின் அதிகப் படங்களில் நடித்தார். பெரிய ஹீரோக்ளின் படங்களில் இவர் தான் ஹீரோயின்.
அழகான தோற்றம், அம்மாவை போல அசத்தும் நடிப்பு..! அம்மா இருந்தவரை எந்தக் கவலையும் இல்லை. அப்பா இல்லாதாதால் அதிக செல்லமாக வளர்ந்தவர்.
அப்பா என்றோ ஓடிபோய் விட்டார். ஒரு நாள்.. பொத்திப் பொத்திப் பாதுகாத்த தேவிகா இறந்து விட்டார். கனகா தவித்துப் போனார்.
ஓடிப்போன அப்பா தேவதாஸ் மீண்டும் தேடி வந்தார். சொத்துகள் மீது அவருக்கு ஒரு கண். கனகாவை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார்.
குடித்து விட்டு வந்து வீடு முன்னாள் கத்தி ஆர்பாட்டம் செய்தார்..! கடும் மனஉளைச்சல்..! மெல்ல நடிப்புக்கு குட் பை சொன்னார் கனகா.
தனி வீடு வேலைகாரப் பெண்கள் பாதுகாப்புடன் முடங்கிப்போனது அந்த அழகு தேவதை..! ஆனாலும் அந்த அப்பா தொடர்ந்து கேன்சர் என்றும் மெண்டல் என்றும் செய்திகள் பரப்பினார்..!
கனகா என்ன சொல்கிறார் என்று படியுங்கள்..!
இந்த வதந்திகளை என் தந்தை எனக் கூறி கொண்டு திரியும் தேவதாஸ் தான் பரப்பி வருகிறார். இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார்.
இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் என்னைத் தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள முடிகிறது.
என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டுக்கு எப்படி வருகிறார்.
அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு ஒரு நாளும் அவர் நல்ல கணவனாக நடந்து கொண்டதே இல்லை.
எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அவர் ஒரு பணப்பேய் அவரால்தான் எனக்கு ஆண்களைப் பிடிக்காமல் போய் விட்டது.
அதனால் தான் திருமணமே வேண்டாம் என முடிவேடுத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்கிறேன். நாய், கோழி இவற்றுடன் தான் வசிக்கிறேன்.
மனிதர்களை விட இவைகள் எவ்வளவோ மேல் என் உதவிக்கு, என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.
எக்காரணத்தை கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் அவரை அனு மதிக்கமாட்டேன்.
என் அம்மாவிற்கு அவர் செய்ததுரோகத்தை நான் மன்னிக்கவே மாட்டேன். அதே மாதிரி சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன்.
ஆனால் அவர்கள் என்னிடம் பேச விரும்பவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. வாசலில் வந்து நின்ற தேவாசை துரத்திவிட்டேன்..! இப்படி பத்திரிகையாளர்கள் முன்பு பேட்டி அளித்தார் கனகா. இப்போது அந்த அப்பா கொஞ்ச நாட்களாக காணவில்லை..! ஆனாலும் பயந்தே வாழ்ந்து வருகிறார் நடிகை கனகா.