சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் ஒரு ஆடை விளம்பரத்தில் நடித்தார். இந்த விளம்பரத்தில் ஒரு நடிகையை தூக்கி தோளில் வைத்து கொண்டதோடு அவரது கை, நடிகையின் தொடையில் படும்படி உள்ளது.
இதுமட்டுமின்றி “காத்திருக்க வேண்டாம், வேலையை வீட்டிற்கு கொண்டு செல்லுங்கள்” என்று இரட்டை அர்த்தம் பொருள்தரும்படி அருகில் ஒரு வாசகமும் உள்ளது.
இந்த விளம்பரத்திற்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ரன்வீர் சிங் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பெண்களை தான் எப்போதும் மதிப்பவன் என்றும் நாங்கள் ஒன்று கூற நினைத்து அது வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.