குண்டாக இருப்பதால் தன்னை வெறுத்து ஒதுக்கி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்ட கணவனுக்கு மனைவி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜோஸ் என்பவர் லிசித் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அன்யோன்யமாக வாழ்ந்த வந்த இவர்களுக்கு 5 வருடங்கள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த பின்னர் லிசித்தின் உடல் எடை அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. ஏனெனில் வீட்டில் சரியாக சமையல் செய்ய முடியாத காரணத்தால், அதிகமாக கடைகளில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
இதில், மெக்டொனால்ட்ஸ் உணவுகள் மற்றும் துரித உணவுகளே அதிகம். இதனால் லிசித்தின் உடல் எடை அதிகரித்துள்ளது. தனது மனைவியின் உடல் எடையை பார்த்த ஜோஸ், நீ இப்படி இருப்பதால் எனக்கு உன்னை பிடிக்கவில்லை என வார்த்தைகளால் புண்படுத்தியுள்ளார்.
இதனால் மனம் வருந்திய லிசித்தா, படுக்கையறையில் கூட நாங்கள் இருவரும் சந்தோஷமாக இல்லை, இதனால் அவர் என்னை வெறுக்கிறார் என மனம் நொந்துபோயுள்ளார்.
இதற்கிடையில், ஒரு நான் தனது கணவனின் கைப்பேசியை பார்த்த லெசித்தாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
காதல் தொடர்பான குறுஞ்செய்திகளை அதிகமாக பகிர்ந்துகொண்டுள்ளார். இதனை தட்டிகேட்ட லிசித்தாவை பார்த்து, நீ யானை போன்று இருக்கிறாய்.. எனக்கு உன்னை பிடிக்கவில்லை.
உன் உடல் எடை நாளுக்கு நாள் அதிரித்துக்கொண்டே செல்கிறது. நான் இவ்வாறு செய்வது உன் உடல் எடைதான் காரணம் என கூறியுள்ளார்.
கணவனின் இந்த செயலால் கோபம் கொண்ட லிசித்தா, தான் எப்படியாவது உடல் எடையை குறைத்து கணவனுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டார்.
அதன்படியே, தனது உணவில் கவனம் செலுத்தி, கொழுப்பினை குறைக்கும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மேற்கொண்டதால் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
இதற்கிடையில், தனது மனைவி இப்படி ஸ்லிம்மாக இருப்பதை பார்த்த ஜோஸ், உன்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், தனது கணவனை ஏற்றுக்கொள்ள லிசித்த விரும்பவில்லை