தமிழில் வெளியான ரெமோ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. தமிழில் ‘ரெமோ’ படத்தின் வெற்றி மூலம் தன்னை மேலும் வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன், தெலுங்குத் திரையுலகிலும் தற்போது கால் பதித்துள்ளார்
ரெமோ படம் தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ளது. இந்த ‘ரெமோ’ திரைப்படம் தற்போது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாகியுள்ளது. தமிழை விட தெலுங்கில் அதிகமாகச் செலவு செய்து விளம்பரப்படுத்தியுள்ளதை டோலிவுட்டே ஆச்சரியத்துடன் பார்க்கிறது.
இதனை தொடர்ந்து தெலுங்கு திரையுலக அறிமுகம் குறித்து ஆர்வமாகவும், பதட்டமாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இவருடைய தெலுங்கு பிரவேசம் எவ்வாறு இருக்கும் என்பதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.