தனது சீனப் பயணம் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அல்ல என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் சர்வதேச சமுகத்துடன் இணைந்து செயற்பட மாட்டேன் என ராஜபக்ஸ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டை மாற்ற வேண்டுமாயின் பொது மக்களின் ஆதரவை திரட்டி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மாற்றத்தை மேற்கொள்வேன் என மகிந்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
சீன அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவதற்காக மகிந்த சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தான் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.