கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு இப்படி ஒரு வாழ்க்கையா?

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவரின் தினசரி வாழ்க்கை முறை வெளியாக பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தில் சில மாதங்களுக்கு முன்னர் 23 வயதான வாலிபர் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.

சொந்த ஊரை விட்ட வந்துள்ளதால் தங்குவதற்கு குடியிருப்பு ஒன்றை தேடியுள்ளார். ஆனால், சான் பிரான்சிஸ்கோ நகரில் சிறிய அறையாக இருந்தாலும் கூட அதற்கு அதிகளவில் டொலர் வசூலிப்பதை பார்த்த அவர் வாடகைக்கு வீடு பார்க்கும் எண்ணத்தை கைவிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் பணியில் சேரும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் சில சலுகைகள் வழங்கும். அதே போல், பிராண்டன் என்ற பெயருடைய அந்த ஊழியர் தங்குவதற்கு இரண்டு படுக்கையறை வசதியுள்ள வீட்டை ஏற்பாடு செய்துள்ளது.

4 பேர் தங்க கூடிய இந்த வீட்டிற்கு மாதம் 2,000 டொலர் வரை வாடகை தரவேண்டும். ஆனால், இந்த வசதியையும் பிராண்டன் மறுத்துள்ளார்.

பின்னர், இதே நகரிலேயே தங்குவதற்கு இடம் வேண்டும் என யோசனை செய்த அவர் 2006-ம் ஆண்டு விற்பனை ஆன ஒரு பழைய வேன் வாகனத்தை 10,000 டொலருக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

இந்த வாகனத்தை ஒரு சிறிய குடியிருப்பாக மாற்றிய பிராண்டன் அதனை கூகுள் நிறுவனத்தை சேர்ந்த வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்(Parking area) நிலையாக நிறுத்தி விட்டு அதிலேயே வசிக்க தொடங்கியுள்ளார்.

நிறுவனத்திற்கு வெளியே வாகனம் நிற்பதால் அவரால் நேரம் தவறாமல் அலுவலகம் செல்ல முடிகிறது. இரவில் தூங்கும் நேரத்தை மட்டுமே வேனில் செலவிடுகிறார்.

பின்னர், காலையில் எழுந்து கூகுள் நிறுவன வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் குளித்து விடுகிறார். காலை, மதிய மற்றும் இரவு உணவுகளை கூகுள் நிறுவனம் வழங்குவதால் அவருக்கு சாப்பிடும் செலவுகளும் மிச்சமாகியுள்ளது.

இவ்வாறு கூகுள் நிறுவனத்தின் பார்கிங்கில் தங்கி வருவதால் அவருடைய லட்சக்கணக்கான ஊதியத்தில் 90 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தி அதனை எதிர்கால திட்டத்திற்கு சேமித்து வருகிறார்.van

va1

va2