மனித வாழ்க்கையில் கனவுகள் மிக முக்கியமான இடத்தைப் வகிக்கின்றன. இரவில் நாம் தூங்கும்போது தான் கனவுகள் பெரும்பாலும் வரும். அவ்வாறு வரும் கனவுகளின் பலன்கள் குறித்து பார்ப்போம்!!
* பழங்கள் நிறைந்த மரங்கள் அல்லது பசுமையான காடுகள் அல்லது மலைகள் நிறைந்த காடுகள் கனவில் வந்தால் அது ஐஸ்வர்யத்திற்கான அறிகுறி.
*அதேபோல், பழங்கள் நிறைந்த மரத்தின் மீதேறி பழங்களை பறிப்பது போல் கனவு வந்தால் சொத்துக்கள் அதிகமாக குவியும்.
* மலைகளின் மீது ஏறுவது போல கனவு கண்டால் அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கும்.
*கழுதை கனவில் வந்தால், மூடன் கூட அதிக செல்வங்களை சேர்ப்பான்
*யானை, குதிரை, பசு, எருது, தங்கம் போன்றவை கனவில் வந்தால் எல்லா வகையிலும் மேன்மை தரும்.
*கனவில் தங்கம் வந்தால் அனனித்து வகையிலும் மேன்மை தரும். அதே போல் கனவில் பசுமாடு வருவது மிகவும் நல்லது.
*நாய் இறப்பது போல கனவு வந்தால் அது நமக்கு பெரும் உதவியாக இருப்பவர் மரணமடைய போகிறார் என்பதை குறிக்கும். அதே போல், நாயை வளர்ப்பது போல் கனவு கண்டால் அது நமக்கு பிறரால் நன்மை ஏற்படுவதற்கான அடையாளம்.
* கனவில் பாம்பு அல்லது தேள் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி மற்றும் பண வரவு நிச்சயம்.
* அதேபோல், நாகம் வலது தோளில் ஏறிவது போல் கனவு கண்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும். மேலும் வறுமையில் இருப்பவர்கள் செல்வந்தராக மாறுவார்கள்.
* அதுவே, கனவில் சாரைப்பாம்பு வந்தால் நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ நமக்கு துரோகம் செய்ய போகிறார்கள் என்பது உறுதி. ஆகையால் எல்லோரிடமும் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம்.
* கனவில் உடைந்த குடம் வந்தால் நாம் சில துன்பங்களை தாங்கிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
*கீரி கனவில் வந்தால் துன்பங்கள் மறையும், நோய் விலகும். அதே போல், நரி இறப்பதை போல் கனவு கண்டால் நல்ல பலனே.