ஸ்வாதி..ராம்குமார், தமிழச்சி..திலீபன் மகேந்திரன் …மறக்க கூடிய பெயர்களா..? ஆனால் நாம் மறந்து விட்டோம்.
அதிலும் பேங்க் வாசிலில் போராடும் நாம் சுத்தமாகவே ராம்குமாரை மறந்தே போனோம். ஆனால் சமூகப் போராளி திலீபன் மகேந்திரன் இன்னும் மறக்கவில்லை. காரணம் ராம்குமார் குடும்பத்தை தத்து எடுத்துக் கொண்டார்.
ராம்குமாரின் அண்ணன் நான்..இது என் அப்பா, அம்மா இவள் என் தங்கச்சி..இது என் குடும்பம்.. என்று தனது முக நூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் தனது முகநூல் ஆதரவு வட்டம் மூலம் நிறைய வசூல் செய்து யார் யார் அனுப்பினார்கள், எவ்வளவு என்று தெளிவாக அறிவித்து விட்டு அதை அப்படியே ராம்குமார் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்.
என் தங்கையை நல்ல முறையில் மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவும் செய்துள்ளார் என்கிறார்கள்.
மீனாட்சிபுரம் இனி எனது கிராமம். அந்த கிராமத்து மக்கள் எனக்கும் சொந்தம் என்கிறார் இந்த மனித நேயப் போராளி…! நல்லவர்களும் இறைவனும் உங்கள் பின்னால் இருப்பார்கள்..!