தேர்தல் முடிவு ஏற்கனவே மக்களால் முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் மறுவாக்கு எண்ணிக்கை என்பது ஒருவித மோசடி என்று ட்ரம்ப் ஆவேசமாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார்.
விஸ் கான்சின், மிக்சிகான் மற்றும் பென்சில்வேனியா ஆகிய 3 மாகாணங்களில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக அங்கும் ட்ரம்ப் வென்றார்.
எனவே இந்த 3 மாகாணங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்பெயின் விஸ் கான்சின் மாகாணத்தில் மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு செய்துள்ளார்.
அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியாவிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே கிரீன் கட்சி வேட்பாளரின் கோரிக்கையை ஹிலாரி கிளிண்டன் தரப்பும் ஆதரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ட்ரம்ப் கூறுகையில், இது ஒருவகை மோசடியாகும். மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்தது தேவையற்றது.
ஏற்கனவே தேர்தல் முடிந்து விட்டது, தேர்தல் முடிவும் மக்களால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.