-
மேஷம்
மேஷம்: பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப் பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப் புகள் தேடி வரும். மாலை 3.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
-
கடகம்
கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவி னர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமை க்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.
-
கன்னி
கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
-
துலாம்
துலாம்: மாலை 3.20 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியா மலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உய ரும். உத்யோ கத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலை 3.20 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.
-
தனுசு
தனுசு: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். மதிப்புக் கூடும் நாள்.
-
மகரம்
மகரம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
-
கும்பம்
கும்பம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொட ங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
-
மீனம்
மீனம்: மாலை 3.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். பணப்ப ற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். உத்யோ கத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து மனநிம்மதி கிட்டும் நாள்.